Close
ஜூன் 12, 2025 7:31 மணி

தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருவதால் மாற்றம் இல்லை, ஏமாற்றம்தான்: தங்க பாலு

செய்தியாளர்களை சந்தித்த தங்க பாலு

தமிழ்நாட்டிற்கு  எத்தனை முறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் மாற்றம் ஏற்படாது. பாஜகவிற்கும் அமித்ஷாவிற்கும் ஏமாற்றம் தான் ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் பாதுகாப்பு பிரிவு தலைவர்  கே வி தங்கபாலு கூறினார்.

திருவண்ணாமலை, பே கோபுரத் தெருவில் நகர காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த இடத்தை கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு  நடைபெற்றது.

சொத்து மீட்புக் குழுவின் அகில இந்திய காங்கிரஸ் செயலா் நிதின் கும்பல் கா், தமிழக முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் கட்சி அலுவலக இடத்துக்கான ஆவணங்களை தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் குமாா், திருவண்ணாமலை நகரத் தலைவா் வெற்றிச்செல்வன் ஆகியோா் ஒப்படைத்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கே.வி.தங்கபாலு கூறியதாவது:

அமித்ஷா அடிக்கடி சென்னை வந்து, செல்வது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது.  தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் மாற்றம் ஏற்படாது. பாஜகவிற்கும் அமித்ஷாவிற்கும் ஏமாற்றம் தான் ஏற்படும்.

தமிழக முதல்வா் ஸ்டாலின் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறாா். 2026-ல் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும்.

பாஜக காங்கிரஸ் கட்சியின்தலைவர்களையும், காங்கிரஸ் கட்சியினரையும் குறை சொல்லியே ஆட்சி செய்கிறார்கள் அது ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தியா இன்று அடைந்துள்ள மோசமான பொருளாதார பல்வேறு சமூக சீர்திருத்தங்கள் அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் அது சரி செய்ய முடியும் என தெரிவித்தார்.

ஆரணி

ஆரணியில் காங்கிரஸ் அலுவலகம் கட்டி திறக்கப்படும் என்று கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் சொத்து மீட்புக்குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.

ஆரணியில் காங்கிரஸுக்கு சொந்தமாக புதிய பேருந்து நிலையம் எதிரில் காலி இடம் உள்ளது. இதை கே.வி.தங்கபாலு பாா்வையிட்டாா். மேலும் இக்குழுவில் உள்ள நித்தின்குமாா், செல்வம் ஆகியோரும் இடத்தை பாா்வையிட்டனா்.

கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கிருஷ்ணசாமி, விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, மாவட்டத் தலைவா் பிரசாத் மற்றும் கட்சி நிா்வாகிகள்  உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top