Close
செப்டம்பர் 19, 2024 10:47 மணி

கர்நாடக அரசைக்கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ் .பாலு தலைமையில்  திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க தெற்கு மாவட்ட தலைவர் ரெ.கோவிந்தராசு, மாவட்ட செயலாளர் சி.பக்கிரிசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் இரா.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.  ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் முடித்து வைத்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

விவசாய சங்க நிர்வாகிகள் அ.பன்னீர்செல்வம், சோ.பாஸ்கர், அ.கலியபெருமாள், ஜி. அன்பழகன், நா.செளந்தரராஜன் த.மதியழகன், வி.தொ.ச. நிர்வாகிகள் ஜி.கிருஷ்ணன், எஸ்.தனசீலி, பி.ஏ.கருப்பையா, வி.ராஜமாணிக்கம், மு.பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக பிஜேபி அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு வரும் கர்னாடக அரசுக்கு மறைமுகஆதரவு அளிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசு மீது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து தமிழக  அரசு அவமதிப்பு வழக்கு  தொடரவேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 2.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்திடவும், தினசரி சம்பளம் ரூபாய் 600 உயர்த்தி வழங்கவும்,  இத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தவும், விவசாய தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000 வழங்கிடவும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனை மற்றும். வீடு கட்டித் தரவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top