Close
நவம்பர் 22, 2024 6:09 மணி

புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் புதன்கிழமை(ஜுன்8) நடைபெறவுள்ள அரசு விழாவில் ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05  கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 08.06.2022  புதுக்கோட்டை யிலுள்ள  டாக்டர்.கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள அரசு விழாவில், ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05  கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா,  பண்பாடு  மற்றும் சமய அறநிலையத்துறை, பள்ளிக் கல்வித்துறை.

  நில அளவை  மற்றும் பதிவேடுகள் துறை, சமூக நலம்  மற்றும் மகளிர்  உரிமைத்துறை,  பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தொழிலாளர்கள் மற்றும்  திறன் மேம்பாட்டுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,  உயர்கல்வித் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,  மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்)  ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூபாய் 81 கோடியே 31 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்), சுற்றுலா,  பண்பாடு  மற்றும் சமய  அறநிலையத்துறை என மொத்தம் 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,397 திட்டப் பணிகளுக்கு  முதலமைச்சர்  அடிக்கல் நாட்டவுள்ளார்.

மேலும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்).

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ப்புத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உணவுப் பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் முதலமைச்சர்  பயனாளிகளுக்கு 379 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர்  வழங்கவுள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் புதிய திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூபாய் 603.66 கோடி மதிப்பிலான மக்கள்நலத் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர்  வழங்கவுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், எம்எல்ஏ-க்கள் டாக்டர் வை. முத்துராஜா, எஸ்.டி. ராமச்சந்திரன், எம். சின்னத்துரை, மக்களவை உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசர்,  மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, நகரச்செயலர் ஆ.செந்தில், நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் மற்றும்  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top