நேரு யுவ கேந்திரா சார்பில் 8 -ஆவது சர்வதேச யோகா தினம்
இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்-புதுக்கோட்டை மற்றும் ஆத்மா யோகா ஆகியவை இணைந்து நடத்திய 8வது சர்வதேச யோகா தின விழா 21.6.2022 புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியைமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் உலகநாதன் முன்னிலை வகித்தார்.
நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் திரு. ஜோயல் பிரபாகர் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆத்மா யோக மைய நிறுவனர் யோகா ஆசிரியர் பாண்டியன் யோகா பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர்ஸ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரி, ஜேசீஸ், புத்தாஸ் வீரக்கலைகள் கழகம், மாவட்ட விளையாட்டரங்க பயிற்சி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ஆத்மா யோகா அகாதெமி, நேரு யுவ கேந்திராவின் இளையோர் மகளிர் மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200 பேர் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் ஆற்றிய உரை வெண் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனவைருக்கும் நேரு யுவ கேந்திரா சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட உதவி அலுவலர் ஆர். நமச்சிவாயம் வரவேற்றார். நிறைவாக புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.