Close
மே 20, 2024 9:38 மணி

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டையொட்டி மரம் நண்பர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மரம் நண்பர்கள் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மரம் நண்பர்களும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில், புதுக்கோட்டையிலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியும், புதுக்கோட்டை மரம் நண்பர்களும் இணைந்து கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக துணைக்காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை

இந்த மரம் நடும் நிகழ்வில் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் ஜி.எட்வின்,  சா. விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன், இணைச் செயலர் மூர்த்தி, மற்றும் மரம். நண்பர்கள், மருத்துவர் ராமசாமிகல்யாணி ஆறுமுகம்.

ஸ்டார் ஷெரிப், சக்தி கணேஷ் முத்தையா, ராஜூ, பிரகாஷ், அசோக், பர்வீன் பானு, பொறியாளர்கள் ரியாஷ் கான், இறையன்பு, தினேஷ், மற்றும் சமூக ஆர்வலர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மரிய சாதோ திலக்ராஜ் மற்றும்போக்குவரத்து காவல்துறையினர்   பலரும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top