Close
ஏப்ரல் 6, 2025 10:54 காலை

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21- ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிவாஜி நினைவுநாளையொட்டி உருவப்படத்துக்கு மரியாதை செய்த நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில்

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில், உலக சினிமா அரங்கில் முதல் மரியாதை கண்ட கலைத்தாயின் மூத்த மகன், சிங்கத்தமிழன் செவாலியே, டாக்டர் சிவாஜிகணேசனின் 21 -ஆம் ஆண்டு நினைவேந்தல் விழா தஞ்சை சாலையில் மச்சுவாடி பகுதியில் மாவட்டத் தலைவர் ஏ.சுப்பையா தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன் ராஜா, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆர்.சிவக்குமார்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  உருவப்படத்திற்கு மாலை  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி நினைவு நாள்

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பால்ராஜ்,  முத்தாள், எஸ்.ராதாகிருஷ்ணன், பி.ஆர். சமதர்மன், பி.மூர்த்தி, திவ்யா ரவி , யாசின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.பீர்முகமது, சங்கரன், ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டச் செயலாளர் புதுகை புதல்வன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top