Close
நவம்பர் 21, 2024 3:17 மணி

புதுக்கோட்டையில் தனியார் பஸ் சிறைப்பிடித்த மக்கள்..

புதுக்கோட்டை

விராலிமலையில் தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

அவ்வாறு செல்லும் பேருந்துகள் அனைத்தும் விராலிமலை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்லும். ஆனால் ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் விராலிமலை சோதனைச் சாவடி வழியாகவே சென்று விடுகின்றன.

இதனால் அவ்வப்போது பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்படுவது வாடிக்கையாக  இருந்து வருகிறதுது. இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு வந்த ஒரு தனியார் பேருந்தில்  புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளில் ஒருவர் புதிய பேருந்து  நிலையத்திற்கு நடத்துனரிடம்  டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அந்த பயணியிடம்  புதிய பேருந்து நிலையம் செல்லாது, வேண்டுமென்றால் விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என நடத்துனர் கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்து விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தை வந்தடைந்தது. இதனையடுத்து அங்கு இறங்கிய அவர், ஓட்டுனரிடம்  சென்று ஏன் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது டிரைவர் சரிவர பதில் கூறாமல் பேருந்தை இயக்கினாராம்.

இதைக்கண்ட சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் ஓட்டுனருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட ஓட்டுனரும், நடத்துனரும்  இனிமேல் புதிய பேருந்து நிலையம் சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்கிறோம் என கூறியதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. இதையடுத்து  பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த தனியார் பேருந்து  புதிய பேருந்து  நிலையம் வழியாக  மணப்பாறைக்கு  புறப்பட்டுச் சென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top