தமிழகம் முழுவதும் சுற்றுலா தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் சுற்றுலா தொழில் முனைவோர்களான சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா பயண வழிகாட்டிகள், பயண முகவர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த செப்டம்பர் 27-09-2023 உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலாத்துறை அமைச்சரால் வெளியிடபட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில் சார்ந்த சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா பயண வழிகாட்டிகள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து பயண ஏற்பாட்டாளர், களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுக்கான விண்ணப்பங்கள் www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் பெறலாம். தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். சுற்றுலா தொழில் முனைவோர்கள் அரசாணை யில் உள்ள வழிகாட்டுதல்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். சுற்றுலாத் துறையில் உடனடியாக பதிவு செய்து உரிமம் பெறப்பட வேண்டும்.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர்கள், பதிவு செய்வதற்கான இணைய தளம் மற்றும் விவரங்கள் மேலும் பதிவுக்கான தகவல்களை அறிந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலக தொலைபேசி எண்: 04362-230984 மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா அலுவலர் அலைபேசி எண் 9176995873 என்ற எண்களிலோ அல்லது tntotnj@gmail.com அல்லது tntotnj@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.