Close
டிசம்பர் 3, 2024 5:20 மணி

ஓடும் ரயிலில்… ஓட்டுநர் தூங்கி விட்டால் என்னவாகும்…?

பயணம்

ரயில் ஓட்டுநர்கள் தூங்கினால் என்னவாகும்

ஓடும் ரயிலில்.. ஓட்டுநர் தூங்கி விட்டால் என்னவாகும்…? என்பதை பயணிகள் தெரிந்து கொள்வது நல்லது.

பேருந்து, விமானம், கார் போன்றவற்றை விட ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஏனெனில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பல வசதிகளும் உள்ளது.

இதனால் மக்கள் அதிக அளவில் ரயில்களையே நாடிச் செல்கின்றனர். ரயில்களில் செல்லும் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் வரும். அதில் ஒன்று ரயில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவேளை ரயில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும்.

ரயில் விபத்து ஏற்படும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் ஆகாது. முதல் காரணம் என்னவென்றால் எல்லா ரயிலிலும் 2 டிரைவர்கள் இருப்பார்கள். ஒருவர் தூங்கிவிட்டால் மற்றொருவர் ரயிலை ஓட்டுவார்.

2 டிரைவரும் தூங்கி விட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தோன்றும்? அப்படி இரண்டு டிரைவர்களும் தூங்கிவிட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு டிரைவர் ஒலிபெருக்கியை அடிக்காமலும், ரயில் இன்ஜினின் வேகத்தை குறைக்காமல், அதிகரிக்காமல் இருந்தால் டிரெயின் அதுவாகவே எமர்ஜென்சி பிரேக்கை போடும்.

சில சமயங்களில் ட்ரெயின் அதிகதூரம் ஒரே வேகத்தில் செல்ல வேண்டியிருக்கும். அந்த மாதிரி சூழ்நிலையில் டிரைவர் ‘ரெட் மேன்ஸ் லிவர்’ என்ற பட்டனை அழுத்துவார்கள். அப்படி அவர்கள் அழுத்துவது இன்ஜின் டிரைவர் ஆக்டிவாக தான் உள்ளார் என்பதை குறிக்கும்.

மூன்று நிமிடத்திற்கு மேல் எந்த ஒரு ஆக்ஷனும் அல்லது எந்த ஒரு பட்டனையும் அழுத்தாமல் இருந்தார்கள் என்றால் இன்ஜின் மெதுவாக ட்ரெயினை நிறுத்திவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top