அன்பை மட்டும் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கிவிட்டு சென்ற அன்னை தெரசாவின் பிறந்த நாளை பெருமையுடன் நினைவு கூர்வோம்.
இன்றைய நாளில் நாம் உடலை உருக்கி வருத்தி ஏழைகளுக்கு அன்பு செலுத்த வேண்டியதில்லை நமக்கு வேண்டியவர்களி டம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும், வானம் வசப்படும் என்பதை நினைவில் கொண்டு அனைவரிடமும்
அன்பு செலுத்துவோம்.
“தனிமையும் தன்னிரக்கமுமே மிகப்பயங்கரமான வறுமை நிலையாகும்” என்று சொன்ன அன்னை தெரசா, இந்தியாவில் வாழும் போது கௌரவத்தொடு வாழமுடியாத தொழுநோயா ளிகளை, இறக்கும் தருவாயில் கௌரவத்தோடு அவர்களது கடைசி நாட்களில் கண்ணியத்தோடு நடத்திய மனித நேய தொண்டுக்காக நோபல் வழங்கப்பட்டது.
விருதுகளுக்காக வேலை செய்யவில்லை அந்த நல்லுள்ளம். செய்த வேலை, விருதுகளை வென்று தந்தது.இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் பல விருதுகளை வழங்கி கௌரவித்தது. சர்வதேச அங்கீகாரத்துடன் கூடவே விமர்சனமும் வந்து குவிந்தன.
நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், முறையான பயிற்சி பெற்றவர்கள் இல்லை .., நோயாளிகளை குணப்ப டுத்த உதவுவதற்கு பதிலாக, இறந்து போவதற்கு உதவி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டினார் ..,மத மாற்றம் செய்வது தான் பிரதான நோக்கம் ..,கருக்கலைப்பு மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டுக்கு எதிராகவெளிப்படையாக பேசினார் இப்படி அடுக்கடுக்காக விமர்சனம் வைக்கப்பட்டது.
விமர்சனங்களால் அன்னை தெரசா இன்னும் பிரபலமானார்.. துளியும் தன் மீதான அவதூறுகளை கண்டு சோர்ந்து விடாமல் ஏழை மக்களுக்கும், அனாதைகளுக்கும், தொழுநோயாளர்க ளுக்கும் அவர் செய்து வந்த தொண்டுகள் அளப்பரியன. ஏழை நோயாளிகளுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர். தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், எளிய வாழ்க்கை நடத்தியவர்.
“ஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது” என்கிற அவரது வார்த்தைகளை உள்வாங்கிய படி அவர் மீதான அத்தனை குற்றசாட்டுகளையும் நியாயப்படுத்தவும்,
எதிர்வினையாற்றவும் முயலாமல் நாம் வாழுகிற காலத்தில் ஒரு கருணையுள்ளம் நம்முடன் நமக்காகவும் வாழ்ந்திருக்கி றது என்கிற பெருமிதத்துடன் புன்னகைப்போம்.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋