Close
மே 10, 2024 1:28 காலை

செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை

செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக் கான நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (06.05.2022) வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள இலவச பயண அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளியினை, உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் மானியக் கோரிக்கையில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவி கள் தங்களது கல்வியை தொடர்ந்து இப்பள்ளியின் மூலம் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மூன்று மாண வர்களுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இம்பிளாண்ட் கருவிகள் பொருத்தப்பட்டவர் களுக்கு, காக்கிளியர் இம்பிளாண்ட கருவிகளின் உதிரிப் பாகங்கள் பழுதடைந்தது.

இதைத்தொடந்து, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலி ருந்து ரூ.61,135- மதிப்பில் செவித்திறன் குறைவுடைய மூன்று மாணவர்களுக்கு புதிதாக Cable, Dacapo power pack and Dacapo Frame  போன்ற உதிரிப் பாகங்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில்  பயிலும் 40 செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ரூ.1,98,250 – மதிப்பில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.2,59,385 – மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத் திக் கொண்டு தங்களது கல்வியில் கவனம் செலுத்தவேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top