புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நாணயவியல் கழகம் சார்பில் மகாத்மாகாந்தியின்153- ஆவது ஆண்டை முன்னிட்டுஅஞ்சல் தலை அண்ணல் காந்தி கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் மகாத்மாகாந்தியின்153 -ஆவது ஆண்டை முன்னிட்டு அஞ்சல் தலையில் அண்ணல் காந்தி கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி தமிழ் நாட்டிற்கு வருகை தந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைவு கூறும் வகையில் சிறப்பு அஞ்சல் கவர் அரசால் போடப்பட்டதும் ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சல் வில்லை அவர்களின் வரலாற்றுவுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
கண்காட்சி ஏற்பாடுகளை புதுக்கோட்டை நாணயவியல் கழகம் நிறுவனத் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி சிறப்பாகவும் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு விரிவாக பதில்கள் கூறினார். இந்தியாவின் தேச தந்தை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் என்ன பேசப்பட வேண்டும் என்பதை இந்தியாவிலிருந்து தீர்மானித்தவர் மகாத்மா காந்தி. அவரின் வாழ்க்கை பற்றிய முழுமையான தகவல்களை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதை மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.