Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

ஆதி காலத்து அலங்கார மாளிகை தலை தீபாவளி கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பில் நடைபெற்ற தலைத்தீபாவளி கொண்டாட்டம்

ஆதி காலத்து அலங்கார மாளிகை தலை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை ஜவுளி நிறுவனம் சார்பில் தலை தீபாவளி கொண்டாட்ட விழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடந்தது.
நிறுவன நிர்வாக இயக்குனர் மணிகண்டன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் தங்கம்மூர்த்தி, அஞ்சலி தங்கம்மூர்த்தி, டாக்டர்கள் ரவிக்குமார், ஜானகி,  சென்னை ஐடியா பிளஸ் தலைவர் கிருஷ்ண வரதராஜன், இயக்குனர் அனு வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுமண தம்பதிகளுக்கு தலை தீபாவளி கொண்டாட்டம் குறித்த கருத்து பரிமாற்றம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி  புதுமண தம்பதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
விருந்தினர்களை இணை நிர்வாக இயக்குனர் எஸ்.இளையராஜா கௌரவித்தார்.நிகழ்ச்சியில்  70 ஜோடி திருமணத் தம்பதியினர் கலந்து கொண்டனர்.முன்னதாக  அனைவரையும் இணை நிர்வாக இயக்குனர் அருண் தியாகராஜன் வரவேற்றார். நிறைவாக  நிறுவன நிர்வாக மேலாளர் ராம.ஆண்டியப்பன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top