தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் பண்டிகைக்கான ஜவுளிகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கீழராஜ வீதி, மேலராஜ வீதி, வடராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகிய வீதிகளில் ஆயிரக்கணக்கிலான மக்கள் கூட்டம் அலைமோதியது.
பண்டிகைக்காக சாலையோர கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.