Close
மே 18, 2024 5:30 காலை

புயல் மழை நிலவரம்.. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்

தஞ்சாவூர்

ஆட்சியர் தீபக்ஜேக்கப்

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் அருகாமையில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் வழியை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அவசர காலத்திற்கு தேவையான உலர்ந்த உணவுகள். பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வதந்திகளை நம்பாமல் அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது எனவும், மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அது தொடர்பான புகார்களை மின்வாரிய அலுவலகத்தில் இயங்கிவரும் 9498486899 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடங்களில் தங்குவதை தவிர்த்திட வேண்டும். வெள்ளநீர் அதிகம் தேங்கியுள்ள அல்லது வெளியேறும் பகுதிகளுக்கு செல்லக்கூடாது.

இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது மரங்களின்கீழ் நிற்கக் கூடாது. வெள்ளக் காலங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் குளிப்பதை தவிர்த்திட வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாத்திடவேண்டும். சுகாதாரமற்ற உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது. காய்ச்சிய நீர் மற்றும் சூடான உணவுப் பண்டங்களையே உண்ண வேண்டும் . மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

மேலும், கனமழை, மற்றும் புயல் தொடர்பான புகார்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்கோ அல்லது அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கீழ்கண்ட எண்களில் தெரிவித்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

1.வட்ட அலுவலகம், தஞ்சாவூர்- 04362-230456.

2.வட்ட அலுவலகம், திருவையாறு- 04362-260248.

3.வட்ட அலுவலகம், ஒரத்தநாடு- 04372-233225.

4. வட்ட அலுவலகம், பூதலூர் – 04362-288107.

5.வட்ட அலுவலகம், கும்பகோணம்- 0435-2430227.

6.வட்ட அலுவலகம், பாபநாசம்- 04374-222456.

7.வட்ட அலுவலகம், திருவிடைமருதூர்- 0435-2460187.

8.வட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை- 04373-235049.

9.வட்ட அலுவலகம், பேராவூரணி- 04373-232456.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top