Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

பலத்த மழையால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்த ஒரத்துப்பாளையம் அணை..

திருப்பூர்

ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது.

பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது.

சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வரை 5 அடி தண்ணீரே இருந்தது. மேலும் அனைத்து நீர்வரத்தும் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை இரவு ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து 204 கன அடியில் இருந்து 1193 கன அடியாக உயர்ந்ததால்  சனிக்கிழமை ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் மாலை 4 மணி அளவில் 15 அடியாக இருந்தது.

ஒரே நாளில் 10 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் அணைக்கு வரும் நீரின் வரத்து 578 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து 514 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நுங்கும் நுழையுமாக மழை நீர் நொய்யல் ஆற்றில் வெளியேறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top