Close
மே 20, 2024 5:13 மணி

அரசு பள்ளி மாணவிகள் 583 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்குகிறார், சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர்

அரசு பள்ளி மாணவிகள் 583 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், 583 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  வழங்கினார்.

புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் இல்லம் தேடித் கல்வித்திட்டம், உங்களது உயர் கல்வியை நீங்களே தேர்வு செய்யும் கல்லூரி கனவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகளின் நலன் கருதி விலையில்லா மிதிவண்டிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தியதின் பேரில் 11 -ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.

அதன்படி இன்றைய தினம் 11 -ஆம் வகுப்பு பயிலும் 583 மாணவிகளுக்கு ரூ.27.75 இலட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் எப்போதும் முதலாவதாக விலையில்லா மிதிவண்டி களை மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கும் பள்ளி இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்பது மிகவும் மகிழ்ச்சியானதாகும்.

இந்த விலையில்லா மிதிவண்டிகளை பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கு கல்வி கற்க உரிய நேரத்திற்கு சென்றுவருவதற்கு பயனுள்ளதாக அமையும். மாணவிகள் மிதிவண்டியினை நாள்தோறும் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கான உடற் பயிற்சியாகவும் அமைகிறது. மேலும் மாணவிகள் அனைவரும் தாங்கள் விரும்பும் துறையில் கல்வி பயின்று முன்னேற்றம் அடைந்து, சமுதாயத்தில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும்.

எனவே சிறப்பாக கல்வி பயின்று இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் மாநில அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் பெற்றிட வேண்டி வாழ்த்துகிறேன் என அமைச்சர்.எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன்,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன்,

நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி, பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top