Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்: அஇவிதொச மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை

கீரனூரில் நடந்த அஇவிதொச மாநாட்டில் பேசிய மாநிலச்செயலரர் எம். சின்னத்துரை எம்எல்ஏ

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை உருவாக்கி  நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-ஆவது மாநாடு கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோழர் பி.மருதப்பா நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டுக் கு மாவட்டத் தலைவர் எம்.சண்முகன் தலைமை வகித்தார். வி.மணிவேல் கொடியேற்றினார்.  எம்.ஜோஷி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.  வரவேற்புக்குழுத் தலைவர் கே.தங்கவேல் வரவேற்றார்.

புதுக்கோட்டை
மாநாட்டில் பேசிய மாநில பொதுச்செயலர் அமிர்தலிங்கம்

மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், பொருளாளர் கே.சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர்.

மாநாட்டை வாழ்த்தி மாநில செயலாளர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில செயலாளர் ஏ.பழநிசாமி நிறைவுரையாற்றினார்.

மாவட்டத் தலைவராக எஸ்.சங்கர், செயலாளராக டி.சலோமி, பொருளாளராக கே.சண்முகம், துணைத் தலைவர்களாக எம்.சண்முகம், வி.மணிவேல், சி.ராசு, சுபி, பி.ராமசாமி, துணைச் செயலாளர்களாக கே.சித்திரைவேல், எஸ்.பொருமாள், ஆர்.சக்திவேல், ஏ.செந்தமிழ்ச்செல்வன், எம்.இளவரசு, உள்ளிட்ட 25 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை
மாநாட்டில் பங்கேற்ற விவசாயத்தொழிலாளர்கள்

தமிழக அரசு வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை உருவாக்கி  நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். அவர்களுக்கு வருடத்திற்கு நூறுநாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top