புதுக்கோட்டை கீழே இரண்டாம் விதியில் புதிதாக திறக்கப்பட்ட அழகு நிலையத்தில் திறப்பு விழா சலுகையாக ஒரு ரூபாய்க்கு முகச்சவரம் மற்றும் முடி திருத்தம் செய்யப்படும் என அறிவித்ததை அடுத்து கடையின் முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு ரூபாய் நாணயத்துடன் திரண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் புதிதாக துவங்கப்படும் தொழில் நிறுவனங்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெறுவதற்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
ரெடிமேட் கடை திறப்பு விழா என்றால் ஒரு ரூபாய்க்கு சட்டை வழங்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிடுவார்கள். கடையில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால் அந்த கடைக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விதமான விளம்பரர்களை செய்து வருகின்றனர்.
அதன்படி கீழ இரண்டாம் விதியில் ஸ்டுடியோ 7 என்ற அழகு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அழகு நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களை கவரும் விதத்தில் ஒரு ரூபாய்க்கு முகச்சவரம் மற்றும் முடி திருத்தம் மற்றும் பெண்களுக்கு முடி திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த சலுகையை அறிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் புது ஒரு ரூபாய் நாணயத்துடன் கடை முன்பு வரிசையாக நின்று ஒரு ரூபாய் நாணயத்தை கடையின் உரிமையாளரிடம் வழங்கி முடி திருத்தம் செய்து கொண்டனர்.
மேலும் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச் சூழலை பாதுகாக்க விதத்தில் கடை உரிமையாளர் அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினர்.