Close
ஏப்ரல் 4, 2025 10:45 காலை

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

கோபி

கோபி நகராட்சியிலிருந்து சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 10.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு, 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 3 டன் உணவு கழிவுகள், பழக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு மின்சாரம் தயாரித்து இயந்திரங்கள் இயக்க பயன்படுத்தப் படுகிறது.

மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது 10.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3040 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top