Close
நவம்பர் 22, 2024 8:32 காலை

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கம் சார்பில் நடைபெற்ற தெலுங்கு புத்தாண்டு விழா பரிசு பெறஅற மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தில் தெலுங்கு புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கத்தின் சார்பில் மேல ராஜ வீதியில் உள்ள வர்த்தகர் சங்க கட்டிடத்தில் தெலுங்கு புத்தாண்டு  விழாவும் சங்கத்தின் 22ஆம் ஆண்டுவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.  கௌரவத் தலைவர் மு.அரங்கராமானுஜம், கௌரவ ஆலோசகர் இரா.சௌந்தரராஜன், பொருளாளர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அ.ஜனார்தனம் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் திண்டுக்கல் தமிழ் மாநில நாயுடு பேரவையின் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி,  திண்டுக்கல் சீனிவாசன், தஞ்சாவூர் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் க.செந்தில் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நகர்மன்ற உறுப்பினர் ஜே.ரமேஷ்பாபு, ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியின் நிறுவனர் அ.சுரேஷ், தணிக்கைக் குழு உறுப்பினர் தா.இராதாகிருஷ்ணன்,  துணைத் தலைவர் கே.என் இராஜேந்திரன், துணைச் செயலாளர் கே.ஸ்ரீதரன், பொறியாளர் ஜே.மதியழகன், துணைத் தலைவர் எஸ்.சேதுராமன், மகளிர் அணி நிர்வாகி சித்ரா,  புதுகைப் புதல்வன் என்ற தேவராஜ்,  ஆலங்குடி கோசல்ராம், அறந்தாங்கி வெங்கடேசன், மேலப்பனையூர் இரா.சக்கரவர்த்தி,  கரூர் வேலுச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுக்கோட்டை
தெலுங்கு புத்தாண்டு விழாவில் பங்கேற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள்

விழாவில் 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 474 மதிப்பெண்கள் பெற்ற மாணவி. எஸ்.வி.காயத்ரி, 445 மதிப்பெண்கள் பெற்ற இரா.அக்ஷிதா மற்றும் 427 மதிப்பெண்கள் பெற்ற ஆ.பிரஜின் குமார்.

2022 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 555 மதிப்பெண்கள் பெற்ற ச.முகேஷ்கண்ணா,  547 மதிப்பெண் கள் பெற்ற வி.விதுலா ஆகியோருக்கு நினைவுப் பரிசும் வெள்ளிப் பதக்கமும் அளித்து பாராட்டப் பெற்றனர்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் – மன்னர் திருமலை நாயக்கர் – இராணி மங்கம்மாள் என்ற தலைப்புகளில் நடத்தப் பெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகத் தங்களது திறமையை வெளிப்படுத்திய நா.ஸ்ரீ.கிருஷ்ணா, லெ.லெட்சுமிபிரபா, தே.தேவதர்ஷினி, ம.நிகிலா,ர.பத்மஸ்ரீ, எஸ்.ஆர்.சுரேந்தர் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டப் பெற்றனர். விழாவில் கலந்து கொண்டோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் ஆர்.செல்வராஜ்  நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top