Close
நவம்பர் 22, 2024 12:52 மணி

பெருந்துறை குள்ளம்பாளையத்தில் ரூ 25 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்: எம்எல்ஏ ஜெயகுமார் தொடக்கம்

பெருந்துறை

பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் ஊராட்சியில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளை . பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் .ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் ஊராட்சியில்  ரூபாய்  25 லட்ச ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், குள்ளம்பாளையம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தார் சாலை உள்ளிட்ட  ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான நான்கு பணிகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவன குழு உறுப்பினருமான ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.

வெள்ளியம்பாளையம் புதூர் பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், ஒத்த பனங்காடு பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், மேட்டுப்பாளையம் பகுதியில் புதிய தார் சாலையும், குள்ளம்பாளையத்திலிருந்து மணியம்பாளையம் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணியும் பாலக்கால் அமைத்து பூஜை போடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ் தலைமை வகித்தார். குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணை மன்ற துணைத் தலைவர் ரமேஷ், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம், வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், அருணா, விஜயலட்சுமி, அம்சா, மணி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top