Close
நவம்பர் 22, 2024 12:12 காலை

புத்தகம் அறிமுகம்…காத்மா காந்தியின் ஆரோக்கிய வழி கட்டுரை நூல்

புத்தகம் அறிமுகம்

மகாத்மா காந்தி எழுதிய ஆரோக்கி. வழி கட்டுரை

“ஆரோக்கியத் திறவுகோல்” மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது “இந்தியன் ஒபினியன்” பத்திரிக்கை வாசகர்களுக்காக” ஆரோக்கிய வழி” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளின் புத்தக வடிவத்தின் மறுஆக்கம். இது 1942 ல் ஏரவாடா சிறையில் இருந்தபோது எழுதியது.
மக்களின் வாழ்க்கை நலமாகவும், வளமாகவும் அமைய வழிகாட்டும் அருமையான நூல் இது. இந்த நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் நமது உடம்பு அதன் நலன் பற்றியும் அதோடு தொடர்புடைய மருந்தாகும் உணவு, நச்சாகும் புகையிலை, பிரம்மச்சாரியம் அவசியம் பற்றி எல்லாம் கூறுகிறார். இரண்டாவது பாகத்தில் இயற்கையின் கூறுகளான பஞ்சபூதங்களைப் பற்றிக் கூறுகிறார்.

உணவு என்று தலைப்பில் எழுதியிருக்கும் செய்திகளை தற்போது உணவைப் பற்றி அதிகம் பேசும் மருத்துவர் கு.சிவராமன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார் காந்தி. லாகிரி வஸ்துகள் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் மதுவைப் பற்றிக் குறிப்பிடும்போது “இவை அனைத்துக்கும் கண்டிப்பான தடைவிதிக்கப்பட வேண்டும்.

மது அருந்திய ஒருவன் தன்னையே மறந்துவிடுகிறான்; போதை நீடிக்கும் வரையில் உபயோகமுள்ள எதையும் செய்வதற்கு அறவே இயலாதவனாக இருக்கிறான். குடிப் பழக்கத்தை கைக்கொள்கிறவர்கள் தங்களையும், தங்களைச் சேர்ந்தவர்களையும்நாசத்திற்குள்ளாக்குகிறார்கள்அவர்களுக் குமட்டும் மான மரியாதை உணர்ச்சிகள் இல்லாமல் போய்விடுகின்றன” என்கிறார்.

இந்த புத்தகத்தின் முன்னுரையில் காந்தி சொல்கிறார், “இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆரோக்கிய விதிகளை கடைபிடிப்பவர்கள் அன்றாடம் டாக்டர்கள், வைத்தியர்கள் ஆகியோர்களின் வீட்டுக் கதவுகளை தட்டவேண்டிய அவசியம் ஏற்படாது” என்று.

இந்த நூலை மொழிபெயர்த்தவர், நூற்றாண்டுவிழா கொண்டாடும் பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமி.மூலநூல் போலவே உள்ளது அவரின் தமிழாக்கம். அனைவரின் இல்லத்திலும், காந்தி சுயசரிதம் போல் இதுவும் இருக்க வேண்டும்.நூல் கிடைக்குமிடம்.காந்திய இலக்கிய சங்கம்,
காந்தி மியூசியம், மதுரை.

.==பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top