Close
ஏப்ரல் 5, 2025 3:56 காலை

ஆலங்குடி தமுஎகச சார்பில் இலக்கிய சந்திப்பு

புதுக்கோட்டை

ஆலங்குடி கிளை தமுஎகச

புதுக்கோட்டை மாவட்ட  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆலங்குடி கிளை சார்பில் புதன்கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்சிக்கு கிளைத் தலைவர் ஆர்டிஸ்ட் முருகேசன் தலைமை வகித்தார். ‘பெரியாரும் வைக்கமும்’ என்ற தலைப்பில் மாவட்ட துணைத் தலைவர் சு.மதியகழன், ‘கண்ணதாசனும் கவிதையும்’ என்ற தலைப்பில் கோவிந்தசாமியும் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெ.வெள்ளைச்சாமி வாழ்த்திப் பேசினார்.

வம்பன் செபா கவிதை வாசித்தார். சரணவன், வெற்றி, சசி ஆகியோர் பாடல்கள் பாடினர். முன்னதாக கிளைச் செயலாளர் நேசன் மகதி வரவேற்றார். துணைச் செயலாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top