Close
மே 11, 2024 6:14 காலை

புத்தகம் அறிவோம்…சங்கரரின் வேதாந்த முரசு…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம் சங்கரரின் வேதாந்த முரசு

மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதிற்குள் அந்த பிராமண இளைஞர் தமது நூல்கள் அனைத்தையும் எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதினாறு வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய நவீன உலகின் விந்தை ளாக உள்ளன, அந்த இளைஞரும் அது போலவே ஆச்சரியமானவர். இந்தியாவின் அப்பழுக்கற்ற தூய்மையை மீண்டும் கொண்டு வர அவர் விரும்பினார். அது அவ்வளவு சாதாரண வேலையா என்ன!
சற்று எண்ணிப் பாருங்கள். ”
— சுவாமி விவேகானந்தர் .

கேள்வியும் பதிலும்.

உண்மையான அறிஞன் யார்?
எது நல்லது எது கெட்டது என்பதைப் பிரித்தரிகின்ற விவேகம் உள்ளவன்.

எது விஷம்?
பெரியவர்களின் அறிவுரையை மீறி நடப்பது.

ஒருவனை பிறர் மதிக்கச் செய்வது எது?
எதற்காகவும், யாரிடமும் கையேந்தாதவனை எல்லோரும் மதிப்பாகள்

எதற்காக முயற்சிக்க வேண்டும்?
நல்ல கல்வி, நல்ல மருத்துவ சிகிச்சை, பிறகுக்கு கொடுக்கும் பழக்கம்.

எது மேலானது?
துன்பப்படுபவர்களுக்காக இரங்குவது, நல்லவர்களிடம் நட்பு கொள்வது.

அரியவை எவை?
1. இனிய வார்த்தைகளுடன் ஒருவருக்கு ஒன்றைக் கொடுத்தல்
2. ஆணவம் இல்லாத அறிவு.
3. மன்னிக்கும் தன்மையுடன் கூடிய வீரம்.
4. தான சிந்தையுடன் சேர்க்கின்ற செல்வம்.
— சங்கரர்

32 ஆண்டுகளே வாழ்ந்த சங்கரர் இந்து சமயத்திற்கு உயிரூட்டியவர். சங்கரரின் உபதேசங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் மக்களை பண்படுத்துவதாக உள்ளது.

“சங்கரரின் வேதாந்த முரசு” அவரின் வரலாற்றையும் போதனை களையும் சொல்லும் சிறிய கையடக்க பதிப்பு.

வெளியீடு,ஸ்ரீராமகிருஷ்ணமடம்,மைலாப்பூர்,சென்னை. 600004- விலை -ரூ.6/-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top