Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

கர்நாடகாவின் மூத்த இதழியலாளருக்கு பாராட்டு

பெங்களூரு

கர்நாடகாவின் மூத்தபத்திரிகையாளர் சு.கலையரசன் 86 வது பிறந்தநாளில் வாழ்த்து கூறும் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள்

கருநாடகத் தமிழரின் பெருமித வரலாற்று அடையாளமும் இதழியல் குறியீடாகவும் திகழும் சு.கலையரசன் அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியலாளராக திறம்படப் பணியாற்றி, பல்வேறு பாராட்டுகளை பெற்றவர்.

இதழியலாளராக மட்டுமல்லாது எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நிருவாகியாகவும் சிறந்து விளங்கி வருபவர். தங்கவயல் தமிழ்ச்சங்கத்தலைவராக அருந்தமிழ்ப் பணிகளை செம்மையாக ஆற்றி வருபவர்.

இதழியலாளராக அலைந்து திரிந்து அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமகன் முதுமையின் தொட்டிலில் தவழ்ந்து கொண்டுள்ளார்.

 கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கச் செயலாளர் ஆ.வி.மதியழகன், பொருளாளர்க.தினகரவேலு, அறிவழகன், தங்கமணி, திர.வெற்றி, முத்துமணி நன்னன் ஆகியோர்    கோலார் தங்கவயலில் அவரது இல்லத்தில் நடந்த  86-ஆவது பிறந்த நாள் விழாவில் (14-07-2023)  நேரில் சந்தித்து  வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.

பயனாடை, தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்பு மலருடன் கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை ஆணையர், அறிவார்ந்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் வி.இராம்பிரசாத் மனோகர் அவர்கள் அன்புளம் பற்றி அளித்த ரூ.10,000 மற்றும் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.15,000-ஐ மருத்துவ உதவித்தொகையாக  அளிக்கப்பட்டது.

வளமான நாட்டை கட்டமைக்க கண்ணிலும் கருத்திலும் அயர்வில்லாமல் உழைக்கும் இதழியலாளர் வாழ்வில் ஏனோ வளம் கனிவதில்லை, முதுமை நிமிர்வதில்லை, நட்பு நாடுவதில்லை, குடும்பம் ஊக்கமளிப்பதில்லை, சமூகம் கொண்டாடுவதில்லை, அரசு கண்டுகொள்வதில்லை.

இதழியலாளர் சமூகத்தின் இந்தக் குறையை போக்க துணைநின்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் வி.இராம்பிரசாத் மனோகர்  அவர்களுக்கு நன்றியை பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்தனர்

பத்திரிகையாளர் சங்கம் அளித்த நன்றித்தொகுதியை பெற்றுக்கொண்டு  பெருமையில் ஆழ்த்திய சு.கலையரசன்  அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை   நிர்வாகிகள் தெரிவித்து விடைபெற்று திரும்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top