Close
நவம்பர் 22, 2024 5:45 காலை

செஞ்சுரி லயன்ஸ்  சங்கம் சார்பில்   உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம்சார்பில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ்  சங்கம்  மணிமேகலை மெடிக்கல் சென்டர்  மருத்துவமனை  இணைந்து உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.

செஞ்சுரி லயன்ஸ்  சங்கதலைவர்   மூர்த்தி  தலைமை வகித்தார்.   சிறப்பு விருந்தினராக மருத்துவர் சாரதாமணி  கலந்து கொண்டு, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை  வழங்கி தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும் தாய்மார்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

மருத்துவர்  பீட்டர்ராம், லயன்ஸ்  சங்க மண்டலத்தலைவர் திருவள்ளுவன், ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்.  முன்னதாக  கண்ணன்  வரவேற்றார்.  ராம்ராஜ் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை மருத்துவமனையின் பணியாளர்கள் கவனித்தனர்    இதில் ஏராளமான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top