Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

மஞ்சப்பை… கேகேசி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுகை மலர் சந்தையில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட கேகேசி கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டையில்     கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிமாணவிகள் சார்பில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ் வழி  மூன்றாம் ஆண்டு மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு   மாணவிகள் பங்கேற்ற   நெகிழியை  தவிர்த்து    மீண்டும்  மஞ்சப்பை பயன்படுத்த வேண்டி விழிப்புணர்வு பேரணியை  நடத்தினர்.

இப்பேரணியை கல்லூரி வளாகத்திலிருந்து  முதல்வர்   ஜெ . சுகந்தி  தொடங்கி வைத்தார்  300  -க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு பிரிவாக புதுகை பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பூ மார்க்கெட் பகுதியில்  நெகிழி பைகளைத் தவிர்ப்போம் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம்    என்ற  முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணியாகச்சென்றனர்.

செல்லும் வழியில்  உள்ள கடைகளில் பொருள்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் மஞ்சுபையை  வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  மேலும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் மஞ்சப்பை வழங்கி நெகிழியை ஒழிப்போம்   இயற்கை காப்போம் மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி  விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

மாணவிகளின் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை  பொதுமக்களும் கடை வியாபாரிகளும் வரவேற்று நெகிழி பைகளின் பயன்பாட்டை தவிர்ப்பதாகவும்  மாணவிகளிடம் தெரிவித்தனர்

இதேபோன்று மற்ற துறை மாணவிகளும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று    நெகிழி ஒழிப்போம் என்ற மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

நிகழ்வில்  வரலாற்றுதுறைத்தலைவர்   மு . காயத்ரிதேவி,  பேராசிரியர்கள்  வி. எம் .ராஜேஸ்வரி, ஜெயபாரதி மாலா, சத்யாபிரியா உள்ளிட்டோர்       பங்கேற்றனர். மாணவிகளின் பேரணிக்கு காவல் துறையினர்   பாதுகாப்பு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top