கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற உலக உணவு தின கருத்தரங்கம்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரை யும் வரவேற்றார்.வார்டு உறுப்பினர் கலா ராணி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா உலக உணவு தினம் குறித்து பேசியதாவது:
உலக உணவு தினம் என்பது ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று அனுசரிக்கப்படும் ஒரு உலகளாவிய முன்முயற்சி யாகும். இது பசி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்துக்கான அணுகல் போன்ற அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
உலக உணவு தினத்தின் வேர்கள் 1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்டது. இருப்பினும், 1979 -ஆம் ஆண்டு வரை உலக உணவு மாநாட்டின் போது, உலக உணவு தினம் அதிகாரப்பூர்வமாக உலகளாவிய விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைக் கொண் டாடவும் ஊக்குவிக்கவும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்தன.உலக உணவு தினத்தின் கருப்பொருள் நீர் தான் உயிர், தண்ணீரே உணவு. யாரையும் விட்டு விடாதீர்கள்.
இந்த தீம் உணவு உற்பத்தி, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதா ரங்களில் நீரின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. பூமியில் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது மற்றும் உணவின் முதன்மை ஆதாரமான விவசாயத்தில் அடிப்படைப் பங்கு வகிக்கிறது.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கெளதமி, ராஜலட்சுமி, சீதாலெட்சுமி, ரஞ்சிதா, விக்டோரியா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை நிவின் நன்றி கூறினார்.