Close
மே 12, 2024 12:44 மணி

பெருந்துறையில் பீங்கான் பொருள் உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்

ஈரோடு

பெருந்துறையில் பீங்கான் பொருள் உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் ரோகோ பாரிவேர் சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பீங்கான் பொருட்கள் தயாரிக் கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் பூமிக்கு அடியில் ஆழ்துளைகளின் மூலமாக இறக்கி விடுவதாகவும்

அண்மையில் பெய்த மழையால் அந்த சுத்திகரிக்காத கழிவு நீர் வெளியேற்றப்பட்டு மழைநீருடன் கலந்து நல்லா ஓடை வழியாக ஓடைகாட்டூர் குளம், பாலத்தொழுவு குளம், சுண்ணாம்புகாடு குட்டை வழியாக பாடத்தொழுவு குளத்தில் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

சுத்திகரிக்காத இந்த ஆலை கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப் படும் புகையினால் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப் படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் எதிரொலியாக அந்த ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆலை நிர்வாகத்தினர் ஜென்செட் மூலமாக ஆலையை இயக்குவதால் தொடர்ந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாகக் கூறி வாய்ப்பாடி சிறு கிழங்கு பாலத்தொழுவு உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பெருந்துறை அருகே முனியப்பன் கோயில் சரளை பகுதியில் ஒன்று கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசும்போது, சுத்திகரிக்காமல் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆலை நிர்வாகங்களை கண்டித்து மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு நான் முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.மக்க ளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கழிவுநீரை வெளி யேற்றும் ஆலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன், கே.கே.சி.பாலு, உள்ளிட்ட மக்கள் நலப் பிரதிநிதிகள் கட்சி பாகுபாடின்றி ஆதரவு தெரிவித்து பேசினர்.

ஈரோடு
பெருந்துறையில் பீங்கான் பொருள் உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், பீங்கான் தயாரிக்கும் ஆளையும் கழிவு நீரால் நீரின் கடினத்தன்மை 960 ஆகவும், உப்பின் அளவு 8000 TDS க்கு மேல் உள்ளதால் இந்த நீரை விவசாயத்துக்கும், கால்நடைகள் வளர்ப்புக்கும், மக்களின் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்களைக் கொண்டு இருபதுக்கு மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைத்துள்ளோம்.

இனிமேல் சாயக்கழிவு நீரையோ அல்லது ஆலை கழிவு நிறையோ வெளியேற்றும் ஆலைகளை தீவிரமாக கண்கா ணித்து ஆதாரங்களுடன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு உடனடியாக புகார் அளித்து உரிய நடவடிக் கையை மேற்கொள்வோம் என்றனர்.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top