Close
நவம்பர் 22, 2024 12:20 காலை

மாற்றுத்திறனாளிகள் நடத்தும் மசாலா தயாரிப்பு நிலையம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை அருகே மாற்றுத்திறனாளிகள் தொடங்கியுள்ள மசாலா தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திவரும்  மசாலா, மாவு, மரசெக்கு உற்பத்தி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த மசாலா  உற்பத்தி நிலையம் ரூ.49.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை நல்லமுறையில் பயன்படுத்தி உற்பத்தியினை தொடங்குமாறு மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பின்னர், ந.வல்லுண்டான்பட்டியில் மாற்றுத்திறனாளி களுக்காகரூ.19.82 இலட்சம் மதிப்பிலான பேக்கரி தயாரிக்கும் உற்பத்தியினை பிஸ்கட், கேக் தயாரிக்கும் உற்பத்தி நிலையத்தினை மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டார்.

இதில்,  மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் மெர்சிலாசர், உதவிபொறியாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top