Close
நவம்பர் 22, 2024 12:40 காலை

அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.46 கோடி திட்டப் பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

அரிமளம் அருகே தெற்கு பொந்துப்புளி கிராமத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான ஆணைகளை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை,சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்ற பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழாநிலைக் கோட்டை, அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆறு வகுப்பறை மற்றும் இரண்டு அறிவியல் ஆய்வகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட் டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, புதுநிலைவயல் ஊராட்சி, கீழாநிலைக் கோட்டை, அரியநாயகி அம்மன் கோயில் தெற்கு பகுதியில், மாநில நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ.9.66 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேவர் பிளாக் சாலை திறந்து வைத்து, அரியநாயகி அம்மன் திருக்கோயில் குளம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகளும் பார்வையிடப்பட்டது.

காரமங்கலம் ஊராட்சி, காயாம்பட்டியில், சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கம் மற்றும் கும்மங்குடி ஊராட்சி, தெற்கு பொந்துப்புளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை திறந்து வைத்து, 23 நபர்களுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.

மேல்நிலைவயல் ஊராட்சி, பூனையன் குடியிருப்பு பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடமும், கும்மங்குடி ஊராட்சி, தெற்கு பொந்துப்புளியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட் டுத் திட்டத்தின்கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள சாலையினையும் உள்ளிட்ட முடிவுற்ற கட்டிடப் பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் .எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன்.

மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலன், சரவணராஜா, கூட்டுறவு சார்பதிவாளர் .அன்னலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top