Close
நவம்பர் 21, 2024 7:49 மணி

மதுரை மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை

மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழா

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், சமத்துவ பொங்கல் திருவிழா( 2024) மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், பொங்கல் திருவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர் தலைமையில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா அனைத்து கிராமங்கள், நகரங்கள், விவசாயிகள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங் கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் பணியா ளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடை பெற்ற பொங்கல் திருவிழாவில், பள்ளி மாணவ, மாணவி களின் கலைநிகழ்ச்சிகளும், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டி, உறியடி போட்டி, மியூசிக்கில் கார்டு, பலூன் உடைத்தல், பேட்பால் ரவுண்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை, மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டைகள் அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுமத் தலைவர் ரவிச்சந்திரன், துணை ஆணையாளர் சரவணன், கண் காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, கல்வி அலுவலர் மாரிமுத்து, மாமன்ற செயலாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்.

உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி செயற்பொறியா ளர்கள்இ உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், மாமன்ற உறுப்பி னர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top