Close
நவம்பர் 22, 2024 1:23 காலை

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் பொங்கல் விழா வழுக்கு மரம் ஏறும் போட்டி

புதுக்கோட்டை

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குளத்துப்பட்டி யில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் அம்பலகாரர் இளைஞர்களால் நடத்தப்படும் நான்காம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குளத்துப்பட்டி அம்பலகாரர் தெருவில் நடைபெற்ற பொங்கல் விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதே போல கண்கட்டி முட்டை உடைத்தல், பலூன் ஊதி கப் அடுக்குதல் போட்டி, கம்பு சுத்துதல், கையில் ஐஸ் கட்டி வைத்து நிற்பது, பானை உடைத்தல் போட்டிஉள்பட 20 -க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.இதி்ல் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது  இதில், வடகுடிப்பட்டி, குளத்துப்பட்டி, ஆதனூர், கொத்தமங்களம், காயம்பட்டி, உள்ளிட்ட 6 ஊர்க ளைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர். இதில், குளத்துப்பட்டி டைகர் பாய்ஸ் அணியினர் கீழே விழாமல் வழுக்குமரம் ஏறி பரிசை வென்றனர்.

வழுக்கு மர போட்டியை ஊக்குவிக்கும் விதமாக, திருமயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறு.சிதம்பரம் ரூ. 7001 -ம், ஊனையூர் ஊராட்சித்தலைவர் மல்லிகாபழனியப்பன் ரூ.5001 -ம், கட்டாரி மணி அம்பலம் ரூ.2001 -ம், கருவியப்பட்டி வெள்ளைச்சாமி அம்பலம் ரூ.1001-ம், வி. குமார் அம்பலம் ரூ.501 – ஆகியோர் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

மேலும், மரத்துக்கு மஞ்சியை குளத்துப்பட்டி செ.முருகன் அம்பலமும், டி-ஷர்ட்களை செல்வம் வேளார்- கமலா குடும்பத்தினரும், சுவரொட்டியை ம. முத்துக்குமார் அம்பலமும் நன்கொடையாக வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை,வீர முத்தரையர் சங்க மாவட்ட செயலர் வழக்கறிஞர் மதியழகன், இளைஞர் சங்க தலைவர் சதீஷ் அம்பலம், செயலர் கணேசன், பொருளர் முத்துக்குமார், தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் , குளத்துப்பட்டி பெரியோர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top