புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மின் கோட்டம் குழிபிறை ஊராட்சியில் நீடித்து வந்த குறைந்த மின் அழுத்தத்தைச் சீரமைக்கும் வகையில் 2 இடங்களில் ரூ. 9.64 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி (6.2.2024) மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.
குழிபிறை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த குறைந்த மின் அழுத்தம் காரணமாக பொதுமக்களும் வணிகர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். இது தொடர்பாக ஊராட்சித்தலைவர் எஸ்.அழகப்பன், சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியின் கவனத்துக்குக்கொண்டு சென்றார்.
இதையடுத்து, திருமயம் கோட்டம், பொன்னமராவதி உபகோட்டம், குழிபிறை மின்வாரிய பிரிவு பொறியாளர் களுக்கு குறைந்த மின் அழுத்த மின் வினியோகத்தை சீரமைக்க நடவடித்தை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி, குழிபிறை ஊராட்சியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே ரூ 4, 06, 190/- தொகை செலவில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார். 55 வீட்டு மின் இணைப்புகள் 20 வணிக மின் இணைப்புகள் ஒரு அரவை மில் ஆகியவற்றுக்கு சீரான மின் வினியோகம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதே போல, குடியிருப்பு பகுதியில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்த வினியோகத்தை சீரமைக்கும் வகையில் ரூ.5,58,140/- தொகை செலவில் மின் வாரியம் மூலம் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. இதையும் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தார். இதன் மூலம் 40 வீட்டு மின் இணைப்பு கள் 90 வணிக மின் இணைப்புகள் 1 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிவற்றுக்கு சீரான மின் அழுத்தம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதில், ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன், துணைத்த லைவர் நாச்சம்மை மற்றும் உறுப்பினர்கள், திருமயம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய், பொன்னமராவதி உதவிசெயற்பொறியாளர் முத்துசாமி, குழிபிறை மின்வாரிய உதவி பொறியாளர் சிங்காரக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.