Close
அக்டோபர் 5, 2024 8:07 மணி

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு 10 பொது பெட்டிகளுடன் சிறப்பு ரயில்

திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கு 10 பொது பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பான ரயில் பயணம்

பாதுகாப்பான பயணம் மற்றும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதன் காரணமாக நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வழக்கமான ரயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக படுக்கை வசதி மற்றும் உட்காரும் வசதியுடன் ரயிலில் பயணிக்க இடம் கிடைப்பது இல்லை.

இந்த பிரச்சினையில் பயணிகளின் நலன் கருதி பண்டிகை காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது.

திருச்சி -தாம்பரம்

தற்போது நவராத்திரி பண்டிகை என்பதால்  வருகின்ற 11/10/24 முதல் 31/12/2024 வரை  திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது திருச்சிராப்பள்ளியில் இருந்து தினமும் காலை 5:35க்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு நண்பகல் 12:30க்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்கமாக தாம்பரத்தில் இருந்து மாலை  3:30க்கு புறப்பட்டு திருச்சிராபள்ளிக்கு இரவு 11:35க்கு வந்து சேரும்.

வாரத்தில் 5 நாட்கள்  அதாவது செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் சேவை உண்டு.

நிறுத்தங்கள்

தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இந்த ரயிலானது நின்று செல்லும்.

இந்த ரயிலில் 10 பொது பெட்டிகள் உள்ளது. முன்பதிவு வசதியும் உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top