Close
நவம்பர் 21, 2024 9:10 காலை

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்கம்..!

நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழா துவக்க விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதிமொழி வாசித்தார். அருகில் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., மேயர் கலாநிதி ஆகியோர்.

நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், கூட்டுறவு வார விழா 14ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 71வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. கூட்டுறவு வார விழா துவக்க விழா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாநக மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கூட்டுறவு உறுதிமொழியை வாசித்தார். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து வாரவிழாவை துவக்கி வைத்தார்.

வார விழாவை முன்னிட்டு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் கூட்டுறவு கொடியேற்றும் நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடைபெறும். மேலும் கூட்டுறவின் சிறப்புகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படவுள்ளது. திருசெங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மாபெரும் விற்பனை மேளாவும், ரத்த தான முகாமும் நடைபெற உள்ளது.

மேலும் பொதுமக்களின் நலனுக்காக பொது மருத்துவ முகாம். கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகளும், உறுப்பினர் சந்திப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது. கால்நடை மருத்துவ முகாம், இளைஞர் ஈர்ப்பு முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. கைத்தறி கண்காட்சியும் நடைபெறும் என இணை பதிவாளர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top