Close
டிசம்பர் 24, 2024 4:52 மணி

மதுரை மெட்ரோ ரயில் கள ஆய்வு தொடக்கம்

மதுரையில் மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம் என திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்ட இயக்குநர் தலைமையில் களஆய்வு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூனன், நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதி அளித்துள்ளார்.
மதுரை மெட்ரோ ரயில் அமைக்க ரூ 11,368.35 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பூர்வாங்க பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தலைமையில் மதுரை ரயில்வே தண்டவாளம் மற்றும் மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ராமேஸ்வரம் ரயில் லைன் மற்றும் விருதுநகர் ரயில் லைன் அதிகாரிகளுடன் ஆண்டாள்புரம் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.


இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது: மதுரை மெட்ரோ ரயில் ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் தொடங்கி புதூர் வழியாக தமிழ்நாடு ஹோட்டல் அருகே சுரங்க பாதை தொடங்குகிறது.
தொடர்ந்து வைகை ஆறு, மீனாட்சி அம்மன் கோவில் கடந்து ஆண்டாள்புரத்தில் முடிவடைந்து பின்னர் அங்கிருந்து மேலெழும்பி திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரையில் 32 கி மீ க்கு திட்டம் வரையறுக்கபட்டுள்ளது.
ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக இந்தப் பாதையில் செல்கிறது. இதில் தொழில்நுட்ப ஆய்வுக்காக தற்போது வந்திருக்கிறேன். இந்த மெட்ரோ பணியானது 11,340 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சென்று இருக்கிறது இதனை பரிசினையில் வைத்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top