Close
பிப்ரவரி 1, 2025 4:50 மணி

காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்,நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்படும் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள,சின்ன காஞ்சிபுரம் பி எம் எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,பெரிய காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறி, சிறந்த முறையில் கல்வி கற்று உயர வேண்டும் என அறிவுரை கூறினார்.

மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு சான்றிதழ் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

அரசு பள்ளியில் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியர்களுக்கும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.

நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி,முன்னாள் நகர மன்ற தலைவர் சன் பிராண்ட் கே ஆறுமுகம், மண்டல தலைவர்கள் சந்துரு,சசிகலா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோமதி, ஹேமலதா, மற்றும் பள்ளி ஆசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top