Close
மார்ச் 17, 2025 11:09 காலை

புதுக்கோட்டையில் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை

புதுகை எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்சி நிறுவனத்தில் நடந்த மகளிர்தின விழா

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரனாமி & சயின்ஸ் சொசைட்டி மாநில செயலாளர் டி.சாந்தி மகளிர் தின சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,விவசாயத்தில் பெண்கள் அதிகம் சாதித்து வருகின்றனர்.
விவசாயக் கூலி பெண்களுக்கு இன்றும் சமக்கூலி கிடையாது இதிலிருந்தே நம்முடைய பாலின சமத்துவம் எங்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது  இந்த ஆண்டு மகளிர் தினக் கருப்பொருளே பாலின சமத்துவத்தை வலியுறுத்தி தான் இருக்கின்றது. ஆனால் பெண்களுக்கான வன்கொடுமைகள் நடந்த வண்ணம் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு வீரம்னா என்னன்னு சொல்லிக் கொடுக்கணும், வீரமிக்க பெண் குழந்தைகளை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். பெண் சமத்துவத்தை வலியுறுத்துவதற்கு ஒரு முக்கிய தூண்டுகோளாக கல்வி இருக்க வேண்டும். இன்றும் உயர்கல்விளும், அறிவியலிலும் பெண்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதற்கான விழிப்புணர்வை நாம் ஒவ்வொருவரும் கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும். சமூக மாற்றம் என்பது நம் அனைவரின் பொறுப்பாகும் மாற்றம் என்பது நம்மில் இருந்தே துவங்க வேண்டும். நாம் நினைக்கும் ஒவ்வொரு மாற்றமும் நம் குடும்பத்தில் இருந்து துவங்க வேண்டும் என்றார் அவர்.

புதுக்கோட்டை
விழாவிழ் பேசுகிறார் எம்எஸ்எஸ்.ஆராய்ச்சி நிறுவழமுதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்

நிகழ்ச்சியில் முன்னாள் சமம் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.கண்ணம்மாள், மாநகாட்சி உறுப்பினர் செந்தாமரை பாலு, மேனாள் அரிமளம் ஒன்றியக் குழுத்தலைவர் எம்.மேகலாமுத்து, முன்னோடி விவசாயிகள் எம்.முத்துலெட்சுமி, எம்.ராதா, சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை நிறுவனர் பி.தீபா பிரபு, நாடியம்மை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆர்.அன்பு நடராஜன் ஆகியோர் மகளிர் தின சிறப்புகளைப் பற்றி விளக்கி பேசினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில் மூன்று மாத கால ஊட்டச்சத்து பயிற்சி முடித்த 20 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அறிவொளி நண்பர்கள் இயக்க செயலாளர் க.சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி ஆசிரியர் பி.மீனா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top