மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் 2 இலட்சத்து 56 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 7880 தேங்காய் களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலை யாக 25 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலை யாக 30 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலை யாக 30 ரூபாய் 39 காசுக்கும் ஏலம் போனது. மொத் தம் 2924 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 81 ஆயிர த்து 880 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் தேங்காய்பருப்பு 73 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 85 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 93 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 91 ரூபாய் 99 காசுக்கும், இதேபோல் இரண்டாம் தரம் குறைந் தபட்ச விலையாக 50 ரூபாய் 60 காசுக்கும், அதிக பட்ச விலையாக 75 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 72 ரூபாய் 60 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 2509 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 1 இலட்சத்து 74 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து 2 இலட்சத்து 56 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்ப னைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித் தார்.