Close
நவம்பர் 22, 2024 10:04 காலை

புதுக்கோட்டையில் திருநங்கைகள் தின விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (31.03.2022)  நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

 இதில், மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு பேசியதாவது:

திருநங்கைகள் சமுதாயத்திற்கான தனிப்பட்ட உரிமைகள் வழங்கும் பொருட்டு, பிறப்பில் எல்லா உயிர்க்கும் சமம் என்ற அடிப்படையில் சமத்துவ பாகுபாடு இல்லாத திருநங்கைகள் மற்றும் திருநங்கைகள் சமுதாயத்திற்கு, எதிரான செயல்பாடுகளை அவர்களின் மீது திணிக்க இடமளிக்காத வாறும், அதனை தவிர்த்திடும் பொருட்டு அவர்களுக்கென திருநங்கைகள் நலவாரியம் தமிழக அரசின் சார்பில் கடந்த 2008 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவர்களுக்கு ஆதரவாக அரசுத்துறை வட்டாரங்களில் இவற்றினை கருத்தில் கொண்டு,  இந்த சமுதாயத்திற்கு உதவிகரமாக இருக்கும் பொருட்டு அவர்களுக்கான உரிமை கள் மற்றும் நலத் திட்டங்களை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முயற்சியின் அடிப்ப டையில் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருநங்கைகள்  தினம் 31 மார்ச் 2022  கொண்டாடப்படுகிறது.

மேலும், அரசுத் துறையில் உள்ள சமூக நலத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாக ஓட்டுநர் உரிமம், வீட்டுமனைப் பட்டா, Pஆயுலு வீடு, நலவாரிய அட்டை, ஓய்வூதியம் மற்றும் கடன் வசதிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடர்புடைய திருநங்கைகளுக்கு மகளிர்திட்டம் மற்றும் மாவட்ட சமூக நல துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் முத்துலட்சுமி ரெட்டி திருநங்கைகள் சுய உதவிக்குழு தொடங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இத்திட்டம் மூலம் சுழல்நிதியாக ரூ.15,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருநங்கைகள் குழுவிற்கு கடந்த கோவிட் காலங்களில் கோவிட் சிறப்பு கடனாக ரூ.40,000 மற்றும் ரூ.60,000 ஆகிய  தொகைகள் இரண்டு கட்டங்களாக வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் வியாபாரம், சேலை மற்றும் நைட்டி வியாபாரம் உள்ளிட்டவைகள் செய்து வருகிறார்கள். மேலும் இதுவரை குழுவில் இல்லாதவர்களை கண்டறிந்து திருநங்கைகள் சுய உதவிகுழுவில் இணைப்ப தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  திருநங்கைகளுக்கான திறமைகளை வெளிப்படுத் தும் பொருட்டு ஆடை அலங்காரப் போட்டி, நடனப் போட்டி, சமையல் போட்டி, பாட்டு போட்டி மற்றும் இதர திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை திருநங்கைகளுக்கும் சமூக நலத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கென தொழில் நடவடிக்கை மேற்கொள்ள மானியக்கடன் வழங்குவதற்கு கடன் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 திருநங்கைகளின் எதிர்க்காலம் கருதி அவர்களுக்கென ஈஸ்ராம் கார்டு, அதாவது அமைப்புசாரா  அடையாள அட்டை இன்று  தொழிலாளர் நலவாரியம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் 50 திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் விபத்து மரணம் ரூ.20 இலட்சம் மற்றும் பகுதி ஊடல் ஊனம் ரூ.10 இலட்சம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயன்கள் நேரடியாக அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

திருநங்கைகள் திறமைகள், அறிவுத் திறன்கள் போன்ற பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு, நம்பிக்கையான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு உதவி திட்ட அலுவலர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top