Close
நவம்பர் 21, 2024 6:24 மணி

அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை சென்றடைவதற்கு முன்னுரிமை : திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை

திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர் தலைமையில் ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம்

அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை துரிதமாகச் சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்இ மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் (DISHA) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் (23.04.2022) நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வை.முத்துராஜா  (புதுக்கோட்டை), எஸ்.டி.ராமச்சந்திரன்  (அறந்தாங்கி),  எம்.சின்னத்துரை  (கந்தர்வக்கோட்டை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்குபின் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் (DISHA) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 39 திட்டங்கள் குறித்து மாவட்ட  அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மின்னனு தேசிய வேளாண் சந்தை, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், ஊரக மின்மயமாக்கல் திட்டம், அனைவருக் கும் கல்வி இயக்கம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட 39 திட்டப் பணிகள் விவரங்கள், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெறும் பணிகள், முடிவுற்றப் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடை யும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படு வதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சு.திருநாவுக்கரசர்  தெரிவித்தார்.

புதுக்கோட்டை

முன்னதாக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் (2019 – 2020) கீழ் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.66 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் களை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்  வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி அவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும்; அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top