Close
நவம்பர் 24, 2024 8:10 மணி

பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ.2.18 கோடியில் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் ரகுபதி. உடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்

பொன்னமராவதிபேரூராட்சியில் ரூ.2.18 கோடியில் கலைஞர் நகர்புற பேம்பாட்டு திட்டம் 2021-22 -ன் கீழ் வாரச்சந்தை மேம்பாடு செய்யும் பணிகளை  பூமி பூஜை செய்து  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22- ன் கீழ் ரூ.2.18 கோடி மதிப்பிட்டில் வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணிக்கான பூமி பூஜையினை சட்டம், நீதிமன்றங் கள், சிறைச்சாலை மற்றும் ஊழய் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி  (13.05.2022) துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் திடும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதை சாக்கடை, மழைநீர் வடிகால் அமைப்பு, மேம்படுத்தப்பட்ட சாலைகள், பேருந்து நிறுத்தங்கள். தரமான குடிநீர் திடக்கழிவு மேலாண்மை, புதை சாக்கடை மழைநீர் வடிகால், குடிசைப் பகுதி மக்களை பேம்படுத்துதல்.

நகர்புற ஏழைகள் வாழ்வதற்கு வீடுகர் கட்டி கொடுப்பது, சாலையோர வியாபாரிகள் நலன் காப்பது, வீடு இல்லாத வர்களுக்கு புகலிடம் அமைத்து பாரமரித்தல், தனிநபர் மற்றும் சமுதாய கழிப்பிடம் அமைத்தல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை பல்வேறு அரசு நலத்திட்டங்களை தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சியில்  ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை மேம்பாடு பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாரச்சந்தையில் 10.900 சதூ மீட்டர் பரப்பளவில் பேருந்து நிலையத்தில் பின்புறம் 110 எண்ணிகையினன திறந்த வெளிக்கடைகளும், 5 எண்ணிக்கையிலான மீன் கடை மற்றும் 5 இறைச்சிக் கடைகளும், காய்கறிகள் ஏற்றி இறக்குவதற்கான இடம் மற்றும் கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. மேலும் இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டம்:

பொன்னமராவதி

 அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் தலா ரூ.2.10 லட்சம் மானிய உதவித்தொகையுடன் 7 பயனாளிகளுக்கு ரூ 31.50 கட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டுவதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் , பேரூராட்சி உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top