Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

வேலாடிப்பட்டி  அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை

வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் துண்டறிக்கை வெளியிட்ட மதுவிலக்குப்பிரிவு உதவி ஆய்வாளர் துர்காதேவி

வேலாடிப்பட்டி  அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அரசு உயர்நிலைப் பள்ளி வேலாடிப்பட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ஆகியோரின் அறிவுரை பேரில் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார முகாம்கள் நடத்தப்படுகிறது

இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை அருகே வேலாடிப்பட்டி  அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் துர்க்காதேவி கலந்து கொண்டு பேசினார்.

புதுக்கோட்டை

மாணவர்களுக்கு போதை பொருள் சார்ந்த தீமைகள் மற்றும் போலி மதுபானம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை தடுக்கவும் கள்ளச்சாரயம் தடுப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை 10581 என்ற இலவச எண்ணிற்கு தெரிவிப்பது பற்றி மாணவர் களுக்கு விளக்கமளித்து, விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினார். மேலும் மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்க ளை கடைப்பிடித்து நன்றாக படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமென  அவர் அறிவுறுத்தினார்.

 நிகழ்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் கலந்து கொண்டார்கள்.முன்னதாக இந்நிகழ்விற்குபள்ளி தலைமை ஆசிரியர் விஜிலா ஜாய் தலைமை வகித்தார். கணேசன் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.  இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். ‌

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top