ஆதரவற்ற நிலையில் இருந்த 80 வயது மூதட்டியை மீட்ட ஈரநெஞ்சம் அறநிலையம்.
கடந்த 25.06.2022 அன்று நள்ளிரவு போத்தனூர் ரயில் நிலையம் அருகில் ஆதரவற்ற நிலையில் சரோஜா வயது 80 என்ற மூதாட்டி ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி காவல் நிலைய காவலர்கள் உதவியுடன் மீட்டு ஈரநெஞ்சம் அறநிலையத்தின் பராமரிப்பில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சரோஜா பாட்டியின் உறவினரை தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறநிலையம் மேற்கொண்டது. அதன் பயனாக போத்தனூர் பாரதி நகர் பகுதியில் பாட்டியின் மகன் நாகராஜ் என்பவர் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு தகவல் கொடுத்து , உடனடியாக காப்பகத்திற்கு வரவழைக்கப்பட்டு 28/06/2022 அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சரோஜா பாட்டியின் மகன் நாகராஜ் கூறுகையில், எனது தாய் சரோஜா அவருக்கு ஞாபக மறதிநோய் உள்ளவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருந்து காணவில்லை . எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இன்றும் அவர் கிடைக்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கலாம் என்று இருந்தோம்.
இந்நிலையில் இன்று ஈரநெஞ்சம் முதியோர் காப்பகத்தில் இருப்பதை அறிந்து உடனடியாக அம்மாவை அழைத்து செல்ல வந்துள்ளேன். அம்மாவை பத்திரமாக மீட்டு எங்களிடம் ஒப்படைத்த காவல் துறைக்கும் ஈரநெஞ்சம் அறநிலைய நிர்வாகிக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
அது மட்டும் இல்லாமல் அவர் அணிந்து இருந்த நகைகளையும் பத்திரப்படுத்தி எங்களிடம் ஒப்படைத்ததற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என்று கூறி சரோஜா பாட்டியை அழைத்து சென்றார்.
~ஈரநெஞ்சம்மகேந்திரன். (https://www.facebook.com/eeranenjam.organization)