Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திரதின விழா

புதுக்கோட்டை

காசிம் புதுப்பேட்டை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசத்தலைவர்களின் வேடமணிந்து வந்த பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 பள்ளி மேலாண்மை குழுத்தலைவி ஜெயினுல் அரபு நிஷா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை செந்தில்வடிவு  முன்னிலை வகித்து வரவேற்புரையாற்றினார்.  சிறப்பு விருந்தினராக கீரமங்கலம் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் நிஷா ஜெயின் அலாவுதீன் பங்கேற்றஉ  தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

காசிம்புதுப்பேட்டை ஜமாஅத் தலைவர் . முகமது ரசூல் உட்பட ஐமாஅத் பொறுப்பாளர்கள் ஊர்ப்பொதுமக்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.  விழாவில் மாணவர்களின்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வீரமங்கை வேலுநாச்சியார், பகத்சிங், பாரதியார், ஜான்சி ராணி, அம்பேத்கார், உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களைப் போல 40 குழந்தைகள் மாறுவேடமிட்டு அணிவகுத்து  வந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து ஏனைய மாணவர்கள் அணி நடைப்பயிற்சி மூலம்  பார்வையாளர்களை  கவர்ந்தனர்.

புதுக்கோட்டை
காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேச்சுத் திறனை வெளிப்படுத் தினர். சுதந்திர தினம் தொடர்பான பேச்சு, கட்டுரை ,பாட்டு, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு கீரமங்கலம் பேரூராட்சி தலைவர்  சிவகுமார் வழங்கி பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

மாணவர்கள் அனைவரும் தேசியக்கொடி வண்ணத்தில்  பலூன்களை கைகளில் ஏந்தி பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்து காண்பித்தனர்.

மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வை பெற்றோர்க ளும் பொதுமக்களும் பாராட்டினர்.ஏற்பாடுகளை ஆசிரியர் கள் சின்னத்துரை, இளங்கோ, தியாகு, திருமங்கை, கீதாலட்சுமி, சத்தியபூரணி, மற்றும் சத்துணவு பணியாளர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top