தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வானிலை ஆய்வு மையம் கூறியதைப்போலவே பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சிப்காட், மியூசியம், திருவப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.