அன்பான அழைப்பை ஏற்று தனது இல்ல விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த முதலாளியை சாரட் வண்டியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்து ஒரு தொழிலாளி அசத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வளையம்பட்டியை சேர்ந்தவர்கள் ஆனந்த்-மெர்லின் தம்பதியினர். ஆனந்த் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக (Project Manager) பணியாற்றி வருகிறார்.
இவர் தனது இரு மகன்களுக்கு சொந்த ஊரான வளையம்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் முதல் இறை ஏற்பு விழாவினை நடத்த திட்டமிட்டார். அதனை தனது வாழ்விற்கு உறுதுணையாகவும், நண்பனாகவும், வழிகாட்டியாகவும் திகழும் தனது முதலாளியாக கென்ஜோங் -கினை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவர் இன்று(18.8.2024) நடைபெற்ற பெற்ற முதல் இறை ஏற்பு விழாவிற்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான, வேஷ்டி சட்டை அணிந்து வந்த கென்ஜோங் -கிற்குு செண்டை மேகங்கள் முழங்க, வெள்ளை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்மக்கள் புடை சூழ சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழரின் பாரம்பரிய வரவேற்பைப் கண்ட முதலாளி கென்ஜோங் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போனார் என்ற சொல்லலாம்.