Close
நவம்பர் 21, 2024 10:54 மணி

வடகொரியாவில் கடமையை செய்யாத அதிகாரிகளுக்கு மரண தண்டனை

ஜூலை மாதம் சாகாங் மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ல்வேறு மர்மங்களை கொண்ட நாடான வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். அங்கு நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறார். உலக நாடுகளின் மிரட்டலை அவர் கண்டு கொள்வதில்லை.

கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டார். இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று கிம்மின் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டாலும், அது குறித்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது.

கிம் மரணதண்டனைக்கு உத்தரவிடுவது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், கிம் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே உச்சிமாநாட்டைப் பாதுகாக்கத் தவறியதற்காக வட கொரியாவின் அமெரிக்காவிற்கான அணுசக்தி தூதுவர் கிம் ஹியோக் சோல் தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வந்தன. இருப்பினும், சோல் வெறும் அரசு காவலில் இருந்தது பின்னர் தெரியவந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top